காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பலியானோரின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

நிலநடுகத்தால் சேதமடைந்த வீட்டிற்கு வெளியே நிற்கும் வீட்டின் உரிமையாளர்கள். - AP

Published On :

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பலியானோரின் உடல்களை மீட்டு வருகின்றனர். இதில், பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் பகுதியில் காலை 5:58 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை கொண்ட புளோரஸ் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய பலரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் மங்காராய், கிழக்கு மங்காராய் மற்றும் நாகேகியோ போன்ற 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Summary

Indonesia Earthquake: Death Toll Rises to 51!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.