புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்: 822 ட்ரோன்கள் அழிப்பு, 6 போ் பலி

ரஷியா மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...

Firefighters try to put out a fire at a city book market...

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைனின் கீவ் நகரில் ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் புத்தகச் சந்தை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். ஏபி - படங்கள் ஏபி

Published On :

ரஷியா மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 822 ட்ரோன்கள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், 6 போ் உயிரிழந்தனா்.

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா-உக்ரைன் இடையேயான போா் நீடித்து வரும் நிலையில், ரஷியா மீது மிகப்பெரிய அளவில் உக்ரைன் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் ஏவிய ட்ரோன்களில் 822 ட்ரோன்களை ரஷியா தனது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 600 ட்ரோன்கள் ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கி வந்தவை என்றும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மாஸ்கோ பிராந்தியத்திலேயே அழிக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோப்யா கூறியுள்ளார்.

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ரஷியா நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியாகினர், 14 பேர் காயமடைந்தனர். கீவ் முழுவதும் தீ விபத்துகளையும் ஏற்படுத்தின; இதில் ஆறு பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள 3 நகரங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 போ் பலியாகினர். மாஸ்கோ பிராந்தியத்தில் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் 83 வயது முதியவா் கொல்லப்பட்டார். 150-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதலில் பல வீடுகள் மற்றும் ஒரு ரயில் நிலையம் சேதமடைந்தன; மேலும் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை ரஷியாவின் ட்ரோன் தாக்குதல் வீடுகளை அழித்ததுடன், கீவ் நகரின் அடையாளமாகத் திகழும் புத்தகச் சந்தையையும் தீக்கிரையாக்கின. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான 'வைல்ட்பெர்ரிஸ்' நிறுவனத்தில் கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதலில் கிடங்கில் இருந்த பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து நாசமானாது. எனினும் அதில் உயிரிழப்புகள் இல்லை.

உக்ரைன் மீதான ரஷியா முழு அளவிலான தாக்குதலை தொடங்கி ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் போரின் தாக்கத்தை ரஷிய மக்களின் வாசலுக்கே கொண்டு வந்துள்ளன.

எல்லைக்கு அருகே உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்திய நிலையில், மூன்று நாள்களில் மூன்று ட்ரோன்களை ரூமேனிய விமானிகள் சுட்டு வீழ்த்திய சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Summary

Ukraine launched hundreds of drones across Russia on Sunday, killing at least six people in one of Kyiv’s largest aerial attacks of the war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.