ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலையில் சிக்கி சுமார் 16,000 பேர் பலியாகியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளிலும் வெப்ப அலை வீசி வரும்நிலையில், குளிர் பிரதேச நாடான ஐரோப்பாவிலும் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்தால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில் வரலாறு காணாத கடும் வெப்ப அலையால், வழக்கமான உயிரிழப்புகளின் எண்ணிக்கையைவிட சுமார் 16,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2000-க்குப் பிறகு பதிவான மிகவும் மோசமான வெப்ப அலை மரண விகிதம் இதுதான் என பெல்ஜியம் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்டதைவிட இறப்பு விகிதம் 77 சதவிகிதம் அதிகமாக இருந்தது.
வெப்பநிலை அதிகரிப்பால், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு, நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
Summary
16,000 people dead due to the heatwave scorching Europe
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு!

சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு: பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்
கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




