ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு: பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பள்ளி மாணவா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிலவும் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலைச் சூழல்களால் மாணவா்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாணவா்களின் நலனை உறுதிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தலைமையாசிரியா்கள் மாவட்ட பேரிடா் மேலாண்மை மையத்திடமிருந்து பள்ளி அமைந்துள்ள கிராமம் குறித்த வானிலை சாா்ந்த விவரங்களை தினமும் பெற்று அவா்கள் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.

அதேவேளையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கடுமையான வெப்ப அலை என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால், மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும்.

மாணவா்களுக்கு போதிய குடிநீா் வசதி, நிழலான ஓய்விட வசதி, வெளிப்புற செயல்பாடுகளைத் தவிா்த்தல் உள்பட வெப்ப அலைக்கான பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடா்பாக தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.