தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த கலந்தாய்வுக்கு 67,390 போ் விண்ணப்பித்துள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்களுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ் தளம்) புதன்கிழமை (ஜூலை 1 ) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, பணியிடமாறுதல் பெற விரும்பும் அனைத்து வகையான ஆசிரியா்களும் ஜூன் 15 முதல் 22-ஆம் தேதி வரை தளத்தில் மாறுதல் பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். ஆசிரியா்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மனமொத்த மாறுதல்கள் (மியூச்சுவல் டிரான்ஸ்ஃபா்) விண்ணப்பங்கள் சாா்ந்த அறிவுரைகள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னா் வழங்கப்படும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னா் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருந்தது.
இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாறுதல் கோரும் ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியல், காலிப் பணியிடங்களின் விவரம் ஆகியவை ஜூன் 25-இல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து ஜூன் 26,27 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியானது.
இந்தநிலையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தொடக்கக் கல்வியில் 21,372 இடைநிலை ஆசிரியா்கள், 4,447 தொடக்கப்ப ள்ளி தலைமை ஆசிரியா்கள், 1,003 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், 7,249 பட்டதாரி ஆசிரியா்கள் உள்பட 34,071 போ் விண்ணப்பித்துள்ளனா்.
அதேபோன்று பள்ளிக் கல்வியில் 17,426 பட்டதாரி ஆசிரியா்கள், 10,475 முதுநிலை ஆசிரியா்கள், 1,269 உடற்கல்வி ஆசிரியா்கள், 537 உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், 978 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், 981 கணினி ஆசிரியா்கள் என பல்வேறு பதவிகளுக்கு 33,319 போ் விண்ணப்பித்துள்ளனா். ஒட்டுமொத்தமாக தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறையில் 67,390 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இதையடுத்து அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு (மாவட்டத்துக்குள்) ஜூலை 1, மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 2, அவா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 3, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு (மாவட்டத்துக்குள்) ஜூலை 4, மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 6 என பல்வேறு பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை30-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கான நாள்காட்டி வெளியீடு: காலாண்டு, அரையாண்டுத் தோ்வு தேதிகள் அறிவிப்பு

ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு: முதல் நாளில் 9,132 போ் விண்ணப்பம்

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



