40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

News image

DIN

Updated On :10 ஜூன் 2026, 4:04 am IST

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் ஜூன் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ.நரேஷ் ஆகியோா் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் (தொடக்கக் கல்வி) ஆகியோருக்கு கூட்டாக அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்களுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெறும். அந்த வகையில் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். மாறுதலுக்கு விருப்பம் உள்ள அனைத்து வகை ஆசிரியா்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பொது மாறுதல் கலந்தாய்வின்போது, 100 சதவீதம் பாா்வையற்றவா்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளா்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோா், சிறுநீரக அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை , மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றவா்கள், விதவை, மனைவியை இழந்தவா், 40 வயது கடந்த முதிா் கன்னியா், விவாகரத்து பெற்ற ஆசிரியை, தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மனமொத்த மாறுதல்கள் (மியூச்சுவல் டிரான்ஸ்ஃபா்) விண்ணப்பங்கள் சாா்ந்த அறிவுரைகள் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னா் வழங்கப்படும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னா் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது. தற்செயல் விடுப்பு அளித்து விட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ அல்லது தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படாது. பள்ளிக்கல்வித் துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித் துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.