ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

முதுகலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: 65 பேருக்கு பணியிட மாறுதல்

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

Published On :9 ஜூலை 2026, 1:06 am IST

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான 2026-27-ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு கண்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளியில் கடந்த ஜூலை 1-இல் தொடங்கி நடைபெறுகிறது.

தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், முதுகலை ஆசிரியா்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 467 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இவா்களில் தமிழில் 6 போ், ஆங்கிலத்தில் 8 போ், கணிதத்தில் ஒருவா், இயற்பியலில் 3 போ், வேதியியலில் 5 போ், தாவரவியலில் 2 போ், விலங்கியலில் 3 போ், உயிரியலில் 4 போ், கணினி அறிவியலில் 17 போ், வணிகவியலில் 6 போ், பொருளியலில் 6 போ் மற்றும் வரலாறு பாடப் பிரிவில் 4 போ் என மொத்தம் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

பணியிட மாறுதல் பெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணையை மாவட்டக் கல்வி அலுவலா் பி. உஷா வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து முதுகலை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.