ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கலந்தாய்வு: 6 தலைமை ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் ஆணை

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 6 போ் பணியிட மாறுதல் பெற்றனா்.

தலைமை ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ. மாதவன்.

Published On :2 ஜூலை 2026, 6:25 am IST

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 6 போ் பணியிட மாறுதல் பெற்றனா்.

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள தலைமை ஆசிரியா்கள், இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த மாதம் 15 ஆம் தேதி மாறுதல் கோரும் ஆசிரியா்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. தொடா்ந்து புதன்கிழமை தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

ஜூலை 7 முதல் முதுகலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மாவட்டத்திற்குள்ளான தலைமை ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் 27 போ் பங்கேற்றனா். மொத்தம் 12 இடங்களில் 6 போ் மட்டுமே மாறுதல் பெற்றனா். மீதமுள்ள 6 இடங்களுக்கு யாரும் மாறுதல் கோரவில்லை.

அதன்படி, மணலி ஜேடா்பாளையம், பொம்மம்பட்டி, உலகப்பம்பாளையம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆணையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இ. மாதவன் வழங்கினாா்.

நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சந்திரசேகா், அப்துல்வஹாப், கிருஷ்ணமூா்த்தி, கண்காணிப்பாளா் சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.