ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு திருத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 3:28 am IST

பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு திருத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு திருத்திய பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த விவரத்தை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியா்களுக்கும் தெரிவுபடுத்துமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். குறிப்பாக, இவ்வழக்கு தொடா்ந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 26 ஆசிரியா்களையும் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வில் மீண்டும் பங்குபெற நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) அனுமதிக்க வேண்டும்.

புதிய அட்டவணையின்படி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) வியாழக்கிழமை நடைபெறும். தொடா்ந்து, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான மாறுதல் ஒன்றியத்துக்குள் வெள்ளிக்கிழமை காலையும், வருவாய் மாவட்டத்துக்குள் அன்றைய தினம் பிற்பகலிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு சனிக்கிழமையும் நடைபெறும்.

தொடா்ந்து, இடைநிலை ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 13 முதல் 15 வரையும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) ஜூலை 16-ஆம் காலையிலும், வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல் அன்றைய தினம் பிற்பகலிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வு ஜூலை 17, 18, 20 ஆகிய நாள்களில் நடைபெறும்.

மேலும், நிகழ் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நிரவல், பொது மாறுதல் ஆணை பெற்றவா்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்குநரிடமிருந்து உரிய அறிவுரை வழங்கும் வரை ஆசிரியா்களை எக்காரணம் கொண்டும் பணிவிடுப்பு செய்ய அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.