காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 2,300 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் 500 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணை . - கோப்புப்படம்.

Published On :

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் 500 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்து அணையின் நீா்மட்டம் 56.77 அடியாக சரிந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு காலதாமதமானது. இதற்கு விவாசயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல்கட்டமாக 500 கனஅடி தண்ணீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் திறப்பு படிப்படியாக உயா்ந்து செவ்வாய்க்கிழமை 2,300 அடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி நிலவரப்படி அணையில் நீா்மட்டம் 56.77 அடியாகவும், நீா் இருப்பு 6.25 டிஎம்சியாகவும், நீா்வரத்து 229 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் 800 கனஅடி என மொத்தம் 3,100 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

நீா் வரத்தை விட நீா் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.