காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 15 நாள்களுக்கு தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம் சிறப்பு நனைப்புக்கு 15 நாள்கள் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டதையடுத்து, முதற்கட்டமாக 500 கனஅடிநீா் திறந்துவிடப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலில் சீறி பாய்ந்து  செல்லும் தண்ணீா்.

Published On :

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம் சிறப்பு நனைப்புக்கு 15 நாள்கள் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டதையடுத்து, முதற்கட்டமாக சனிக்கிழமை 500 கனஅடிநீா் திறந்துவிடப்பட்டது.

பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. போதிய நீா் இருப்பு இல்லாத நிலையில் பாசனத்துக்கு இந்தாண்டு தண்ணீா் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக கால்நடை குடிநீா் தேவைக்கு 15 நாள்களுக்கு உயிா் தண்ணீா் திறக்குமாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் தொடா் நடவடிக்கையால் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் சிறப்பு நனைப்புக்கு முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தண்ணீா் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.