ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!

10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் குல்வீர் சிங் வெள்ளி வென்றுள்ளது குறித்து...

Gulveer Singh.

குல்வீர் சிங். - படம் - பிடிஐ

Published On :

10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் குல்வீர் சிங் வெள்ளி வென்று சாதனையப் படைத்துள்ளார்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான குல்வீர் சிங் 3 நிமிடங்கள் 36.72 விநாடிகளில் தனது இலக்கை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கெனவே 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் குல்வீர் சிங் வெள்ளி வென்றதன்மூலம் நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை அவர் கைப்பற்றியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு புள்ளிப்பட்டியலில் மொத்தம் 45 பதக்கங்களுடன் இந்தியா 12 ஆவது இடத்திலும் 229 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

After the 10,000 meters, Kulveer Singh has achieved a feat by winning silver in the 1,500 meters as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.