பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தேர்தல் சூதாட்டங்களுக்கு மோடி - அமித் ஷாவால் நியமிக்கப்பட்டவர் ஞானேஷ் குமார்: ராகுல் காந்தி விமர்சனம்!

மோடியும் அமித் ஷாவும் தேர்தல் சூதாட்டங்களுக்கு ஞானேஷ் குமாரை நியமித்துள்ளனர் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஞானேஷ் குமார் / ராகுல் காந்தி

Published On :

மோடியும் அமித் ஷாவும் தேர்தல் சூதாட்டங்களுக்கு ஞானேஷ் குமாரை நியமித்துள்ளனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மீது நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார் என முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் குற்றம் சாட்டியிருந்தார்.

இது அரசியல் களத்தில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.

அதில், “முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆட்களைச் சேர்க்க பணியமர்த்தப்பட்டார். பின்னர் மோடியும் அமித் ஷாவும் அவரை நடுவராக்கி, இந்தியத் தேர்தல் சூதாட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து தொடர்பாக ஞானேஷ் குமார் அல்லது பாஜக சார்பில் எந்த கருத்துகளும் வெளியாகவில்லை.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகின. இது பல்வேறு அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahul Gandhi has criticized Modi and Amit Shah for appointing Gyanesh Kumar for electoral gambles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.