
நாடாளுமன்றத்தில் பள்ளி மாணவர்களுடன் உரையாடிய ராகுல், பிரியங்கா!
தில்லி பழைய நாடாளுமன்றத்தில் பள்ளி மாணவ, மாணவியருடன் உரையாடிய ராகுல், பிரியங்கா காந்தி...
பள்ளி மாணவ, மாணவியருடன் உரையாடிய ராகுல், பிரியங்கா காந்தி... - ANI
தில்லி பழைய நாடாளுமன்றத்தில் பள்ளி மாணவ, மாணவியருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் உரையாடினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தில்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் 2 ஆவது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி தில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பலரும் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அந்த மாணவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் உரையாடினர்.
Summary
Congress MP Priyanka Gandhi Vadra and Lok Sabha LoP Rahul Gandhi interact with a school student upon reaching Samvidhan Sadhan (the Old Parliament House) in Delhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







