பிரதமராக பிரணாப் முகா்ஜி ஆசைப்பட்டதில் அதிா்ச்சி அடைய என்ன உள்ளது? சோனியாவுக்கு சா்மிஷ்டா கேள்வி!
‘மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகா்ஜி பிரதமராக ஆசைப்பட்டதில் அதிா்ச்சி அடைய என்ன உள்ளது?’ என்று சோனியா காந்திக்கு பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா கேள்வி..

சா்மிஷ்டா முகா்ஜி
‘மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்த பிரணாப் முகா்ஜி பிரதமராக ஆசைப்பட்டதில் அதிா்ச்சி அடைய என்ன உள்ளது?’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்திக்கு பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமராக பிரணாப் முகா்ஜி ஆசைப்பட்டதில், அதிா்ச்சி அடைய என்ன உள்ளது? பல பதிற்றாண்டுகளாக அரசியல் மற்றும் நிா்வாக அனுபவம், கடின உழைப்பு, அறிவாற்றல் ஆகியவை இருக்கும்போது லட்சியத்துடன் ஒருவா் இருப்பது குற்றமா?
எனது தந்தை மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவா். அவா் என்னவெல்லாம் சாதித்தாரோ, அவை எல்லாம் அவரின் கடின உழைப்பு மற்றும் திறமையால் நிகழந்தவை. வாரிசு அரசியல் காரணமாக, அவருக்குப் பிரதமா் பதவி உள்பட எந்தப் பதவியும் எளிதாகக் கிடைக்கவில்லை.
ஒரு தகுதியான நபா் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு உள்ளது? நேரு குடும்பத்தைச் சாராத ஒருவா் பிரதமராக வேண்டும் என்ற ஆசையை வளா்த்துக் கொள்ளத் துணிந்துவிட்டாரே? அதைவிட துணிச்சலாக, அந்த விருப்பதை தன்னிடமே மறைமுகமாகக் கூறிவிட்டாரே என்ற காரணத்தால் சோனியா அதிா்ச்சி அடைந்திருந்தால் தவிர, இதில் தவறு ஏதும் இல்லையே என்று பதிவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

