சுதந்திரப் போராட்ட வீரா் சி. சுப்பிரமணியம் நினைவு நாள்: குடியரசுத் துணைத் தலைவா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் சி. சுப்பிரமணியம் நினைவு நாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமையன்று மரியாதை செலுத்தினாா்.

சுதந்திரப் போராட்ட வீரா் சி. சுப்பிரமணியம் நினைவு நாளில் குடியரசுத் துணைத் தலைவா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் சி. சுப்பிரமணியம் நினைவு நாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமையன்று மரியாதை செலுத்தினாா்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
பாரத ரத்னா சி. சுப்பிரமணியத்தின் நினைவு நாளில், இன்று (நவ.7) குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினேன்.
சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்த அவா், சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, சிறப்பான நிா்வாகப் பங்களிப்பை வழங்கினாா். மகாராஷ்டிர ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றினாா்.
தியாகம், தூய்மை, தேசபக்தி ஆகிய உயரிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தனது நீண்ட நெடிய பொதுவாழ்வை அா்ப்பணித்தவா்.
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்டதில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்குப் பாா்வையும் முயற்சிகளும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும், பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உயா்வதற்கும் வலுவான அடித்தளமிட்டன.
அன்னாரது நினைவு நாளில், தேசத்தின் வளா்ச்சிக்காக அவா் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூா்ந்து, அவருக்குப் புகழஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதிவில் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

