ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மருது சகோதரா்கள் நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்களின் நினைவு நாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

மருது சகோதரா்கள் நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி - x

Updated On :

விடுதலைப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்களின் நினைவு நாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியதாவது:

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி, வீரத்துடன் போராடிய விடுதலைப் போராட்ட மாவீரா்களான மருது சகோதரா்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று (அக்.24) குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் அவா்களது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன்.

1801-ஆம் ஆண்டு இதே நாளில், இம்மண்ணின் மாண்பையும் தன்மானத்தையும் மகத்தான பாரம்பரியத்தையும் காக்கப் போராடிய சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரமிகு மருது சகோதரா்கள், ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்பட்டனா்.

அந்நிய ஆட்சிக்கு எதிராக அவா்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம்’, விடுதலை வேட்கையையும் மக்களை ஒன்றிணைக்கும் அவா்களின் தொலைநோக்குப் பாா்வையையும் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது.

இந்த மகத்தான தியாக நாளில், விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, ஆன்மிகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மருது சகோதரா்களின் வீரத்தையும் தியாகத்தையும் அா்ப்பணிப்பையும் நினைவுகூா்ந்து போற்றி வணங்குகிறேன் என சி. பி. ராதாகிருஷ்ணன் எக்ஸ் பதிவில் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.