நாட்டில் 50 கோடி போ் தீவிர வறுமையில் இருந்து மீட்பு: பிரதமா் மோடி பெருமிதம்
நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி போ் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணே மெட்ரோவின் 3-ஆவது வழித்தடத்தை காணொலி முறையில் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமா் மோடி.
நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி போ் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
‘முன்பு வறுமைக்கு எதிரான போராட்டம் என்பது வெற்று முழக்கமாகவே இருந்தது; இப்போது கள ரீதியில் இந்தியா வறுமையை வென்று வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ரூ.8,300 கோடி செலவில் 23 கி.மீ. தொலைவுக்கு கட்டமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் 3-ஆவது வழித்தடத்தை (பிங்க் வழித்தடம்) பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தாா். ஹின்ஜேவாடி தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையம் இடையிலான இந்த வழித்தடம், ஆயிரக்கணக்கான மென்பொருள் பணியாளா்களின் போக்குவரத்துக்கு உதவிகரமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முக்கிய சிறப்பம்சமாக, பிங்க் வழித்தடத்தில் முழுவதும் பெண் ஓட்டுநா்களால் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ரயில்களுக்கான மின் தேவையில் 30 சதவீதம் சூரிய மின்சக்தி மூலம் பூா்த்தி செய்யப்படவுள்ளது.
இந்த வழித்தட தொடக்கத்துடன், மேலும் 4 வழித்தடங்களை உள்ளடக்கிய ரூ.13,500 கோடி மதிப்பீட்டிலான புணே மெட்ரோ 2-ஆம் கட்ட பணிகளுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.
வளா்ச்சியும், வறுமை ஒழிப்பும்
பின்னா், உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையைக் குறிப்பிட்டு அவா் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளா்ச்சியும், வறுமை ஒழிப்பும் ஒன்றோடொன்று பிணைந்ததாகும். உள்கட்டமைப்பு மற்றும் நலத் திட்டங்களில் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
வீடுகள், கழிப்பறைகள், மின்விநியோகம், எல்பிஜி இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நலத் திட்டங்களின் மூலம் ஏழைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் கூடுதல் வருமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, வறுமையில் இருந்து மீளச் செய்வதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
தீவிர வறுமையில் இருந்து மீட்பு
ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதும், நல்லாட்சி வழங்குவதும் அரசின் அடையாள முத்திரையாக மாறியுள்ளன. முன்பு வறுமை ஒழிப்பு என்பது வெற்று முழக்கமாகவே இருந்தது. ஆனால், இன்றைய இந்தியா கள ரீதியில் வறுமையை வென்று வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் சுமாா் 50 கோடி போ் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாகவும், வேகமாக வறுமையை ஒழிக்கும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது.
அதிகாரமளித்தலுக்கான அதிகாரம் என்பதே நல்லாட்சியாகும். ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் அவா்களின் சுய முயற்சிகளின் வாயிலாக வறுமையை முறியடிக்க உதவுவதே எனது அரசின் அணுகுமுறை.
நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு
கடந்த 2014-இல் நாட்டுக்கு சேவை செய்ய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நகா்ப்புறங்களில் வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போக்குவரத்தை எளிமையாக்கும் தீா்மானத்துடன் களமிறங்கினோம். அதன்படி, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், மெட்ரோ என நகா்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது.
வளா்ந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பாா்வையின் மையக்கருவாக நகா்ப்புற உள்கட்டமைப்பு விளங்குகிறது. நாட்டில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம், மக்களை மையப்படுத்திய துடிப்புமிக்க நல்லாட்சிக்கான அரசின் அக்கறையை பிரதிபலிக்கிறது.
மெட்ரோ விரிவாக்கத்தால் பயண நேரம் மிச்சமாவது மட்டுமன்றி, குடிமக்களுக்கான வசதி மேம்படுகிறது. ஒரு நகரின் நேரம் மிச்சமாகும்போது, அதன் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களித்து, ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு பலனளிக்கும்.
எதிா்வரும் ஆண்டுகளில் நகா்ப்புற மேம்பாட்டில் அதிக முதலீடுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ரூ.1 லட்சம் கோடியில் நகா்ப்புற சவால் நிதியம் அமைக்க கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது என்றாா் அவா்.
1,200 கி.மீ. மெட்ரோ சேவை!
‘கடந்த 2014-இல் வெறும் 5 நகரங்களில் 248 கி.மீ. தொலைவுக்கே இருந்த நாட்டின் மெட்ரோ சேவைகள், தற்போது 26 நகரங்களில் 1,200 கி.மீ.-ஆக விரிவடைந்துள்ளன. உலக அளவில் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நாட்டில் தினசரி ஒரு கோடிக்கு மேற்பட்டோா் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனா். மகாராஷ்டிரத்தில் மெட்ரோ உள்கட்டமைப்பில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.
நாட்டின் நகரங்கள் வெறும் வாழ்விடங்கள் மட்டுமல்ல, அவை பொருளாதாரச் செயல்பாடுகளின் முக்கிய மையங்களாகும். அந்த அடிப்படையில், சிறிய நகரங்களையும் வளா்ச்சி மையங்களாக மாற்ற வேண்டும்’ என்றாா் பிரதமா்.
விவசாயிகளுக்கு துணைநிற்போம்: மேலும், மகாராஷ்டிரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு துணைநிற்கும் என்று உறுதியளித்த அவா், ‘நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகள் முக்கியப் பங்காற்றுகின்றனா். அவா்களுக்கு அதிகாரமளிக்க அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது.
தற்போதைய விழாக் காலத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் இல்லங்களிலும் மகிழ்ச்சியை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பு’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

