பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!
பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி பற்றிய தகவல்கள்..
போர் ரகசியங்கள் - கோப்பிலிருந்து
பாகிஸ்தான் உளவாளி சதிவலையில் விழுந்த இந்திய விமானப் படை அதிகாரி, உளவாளியின் ஒரு புகைப்படத்துக்கு, ஒரு போர் ரகசிய ஆவணங்களை பகிர்ந்திருப்பதாக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் சாா்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிா்ந்துகொண்டதாக பணியில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், தில்லி காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் இந்திய விமானப் படை வீரருடன் காணொலி அழைப்புகள் வழியாகத் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள உளவுத்துறை ஒருங்கிணைப்பாளா்களின் சாா்பாகவே அந்தப் பெண் செயல்பட்டு, இந்திய விமானப் படை அதிகாரியை தொடர்பு கொண்டு ரகசியங்களைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த அதிகாரி மீது அதிகாரப்பூா்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மே 30-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவர் மிக முக்கிய ரகசியங்களை கசிய விட்டிருப்பதாகவும், இந்திய ராணுவத்தின் தயார்நிலை, டிரோன்களின் திறன், விமானப் படை நடமாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை, மிக முக்கிய ஆவணங்களை, விமானப் படை வீரர் வாட்ஸ்ஆப் வழியாகவே பகிர்ந்துள்ளார், சுமார் 3,008 தகவல்களும், 65 புகைப்படங்களும், 45 அழைப்புகளும், 4 விடியோ அழைப்புகளும் 6 இணையதள முகவரிகளும் இரு தரப்புக்குள்ளும் பகிரப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் உளவாளியின் பாலியல் ரீதியான புகைப்படம் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு ரகசிய போர் திட்ட ஆவணங்களையும் விமானப் படை வீரர் அனுப்பியிருப்பதாக, அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Air Force officer shared a secret document in exchange for a photograph from a Pakistani spy!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

