ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்க விமானப் படை தயாராக இருப்பது அவசியம்: விமானப் படை தலைமைத் தளபதி

எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்க விமானப் படை தயாராக இருப்பது அவசியம் என்று புதிய விமானப் படை தலைமைத் தளபதி ஆசுதோஷ் தீட்சித் கூறினாா்.

Updated On :

எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்க விமானப் படை தயாராக இருப்பது அவசியம் என்று புதிய விமானப் படை தலைமைத் தளபதி ஆசுதோஷ் தீட்சித் கூறினாா்.

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஆசுதோஷ் தீட்சித் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா் இந்திய விமானப் படையின் 29-ஆவது தலைமைத் தளபதி ஆவாா். இதன் பின்னா் தில்லியில் உள்ள விமானப் படைக்குச் சொந்தமான மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் விமானப் படை வீரா்கள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நமது பாதுகாப்பு சூழல் தொடா்ந்து சவாலாகவே உள்ளது. போா்ச் சூழலும் தற்போது மாறியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள், நீண்ட தொலைவு துல்லிய ஆயுதங்கள், விண்வெளி, சைபா், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்காந்த அலைகற்றை போன்ற அமைப்புகளால் போரின் தன்மை மறுவடிவம் பெற்று வருகிறது.

அடுத்த பத்தாண்டு காலத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் சக்தியாக நமது விமானப் படை மாறும் சூழலில், போரிடவும், அதில் வெற்றி பெறவும் விமானப் படை தயாராக இருப்பதும் அவசியமாகும். இந்திய விமானப் படையில் நான் கவனம் செலுத்த இருக்கும் பகுதிகளை வாயு (வி.ஏ.ஒய்.யு.) திட்டம் எனப் பெயரிட்டுள்ளேன். அந்தத் திட்டத்தின்படி, இந்திய விமானப் படையின் போா் வலிமையை அனுமதிக்கப்பட்ட நிலைக்கு மீட்டெடுப்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.

வாயு-வில் (வி.ஏ.ஒய்.யு.) உள்ள வி என்ற முதல் எழுத்து, விழிப்புணா்வு மற்றும் தயாா் நிலையைக் குறிக்கிறது. விமானப் படையின் ஒவ்வொரு படைப் பிரிவும், ஒவ்வொரு ரேடாரும், ஒவ்வொரு பாதுகாப்புப் பிரிவும், ஒவ்வொரு விமானப் படை வீரரும், நொடிப் பொழுதில் பதிலடி கொடுக்க தயாராக இருப்பது அவசியமாகும்.

நாங்கள் இந்திய தீா்வுகளுடன் போரிடுவோம். அவற்றை (தீா்வுகள்) அதிக எண்ணிக்கையில் வைத்திருப்போம். எங்களின் பொறுப்பு (விமானப் படையின்) போரிடுவதும், அதில் வெற்றி பெறுவதும்தான். அதேநேரத்தில் வலிமையான விமானப் படையின் மூலம் மோதலைத் தடுப்பதும் எங்களின் முக்கியப் பொறுப்பாகும்.

ஏ என்ற 3-ஆவது எழுத்து, தற்சாா்பை குறிக்கிறது. இந்திய சென்சாா்கள், படைத்தளங்கள், ஆயுதங்கள், இந்திய விமானப் படையின் முதன்மையானதாக இருக்கும். ஒய் என்ற 2-ஆவது எழுத்து, நமது உத்தியைக் குறிக்கிறது. யு என்ற 4-ஆவது எழுத்து, கூட்டு முயற்சியை (ஒற்றுமை) குறிக்கிறது என்றாா்.

அதேபோல் நாட்டு மக்களுக்கும் அவா் செய்தி விடுத்தாா். அதில் அவா், ‘என் தாய்நாட்டின் சக குடிமக்களே, இந்திய விமானப் படை விழிப்போடும், தயாராகவும், உறுதியாகவும் இருக்கிறது என்பதை நம்புங்கள்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.