மதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

மதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

மதுரை நகைக்கடை திருட்டில் ஈடுபட ஸ்கூட்டியில் வந்த திருடனின் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

Updated On :

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் முக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திருடன் நகைக் கடைக்கு ஸ்கூட்டியில் வந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் திறக்கப்பட்ட நகை கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 15 கிலோவுக்கு மேல் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர், நகைக் கடையிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பறந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் புதிய நகைக்கடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். அதிகாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் இரவு முழுவதும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளை நடந்த நகைக்கடையைச் சுற்றியுள்ள நேருநகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ரயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளைக்கு முன்பே நோட்டமிட்ட மர்ம நபர்!

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கியத் திருப்பமாக, கொள்ளையில் ஈடுபட்ட நபர் கடந்த 5ஆம் தேதி அதிகாலை நேரத்திலேயே முகமூடி அணிந்து நகைக்கடைக்கு வந்ததாகவும், அப்போது கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கடையை நோட்டமிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கொள்ளைச் சம்பவம் திடீரெனத் திட்டமிடப்பட்டதா அல்லது முன்கூட்டியே பல நாள்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டியில் வந்து ரயிலில் தப்பினாரா?

கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஸ்கூட்டி மூலம் சம்பவ இடத்திற்கு வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைக்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் மதுரையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில், அதிகாலை நேரங்களில் மதுரையில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர்கள், பாதுகாவலர்களிடம் விசாரணை

நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஹ

கொள்ளையன் தனி ஒருவனாகச் செயல்பட்டது போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் பின்னணியில் கொள்ளைக் கும்பல் ஏதேனும் செயல்பட்டுள்ளதா? அல்லது காவல்துறையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தனி நபர் கொள்ளையில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை?

கொள்ளையில் ஈடுபட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வடமாநில காவல்துறையினரின் உதவியையும் மதுரை மாநகர காவல்துறையினர் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் கொள்ளையன் குறித்த உறுதியான தகவலோ, முக்கியத் தடயமோ கிடைக்காததால் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.34 மணிக்கு நகைக் கடையிலிருந்து அதன் அருகில் உள்ள நேரு நகர் சாலையில் நகைக் கடை கொள்ளையன் தனது இருசக்கர வாகனத்தில் விரைந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

Summary

Jewelry store heist in Madurai! Thief arrives on a scooter—CCTV footage causes a stir!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.