இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

இது மக்கள் ஆட்சி அல்ல, தற்குறிகளின் ஆட்சிதான்! டிடிவி தினகரன்

தொகுதி பிரச்னையைக் கூற வந்த நபர் மீது தவெக எம்எல்ஏ ரவிசங்கர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம்...

T.T.V. Dhinakaran questions

டிடிவி தினகரன் - ENS

Updated On :

தொகுதி பிரச்னையைக் கூற வந்த நபர் மீது தவெக எம்எல்ஏ ரவிசங்கர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதன் மூலம் இது மக்கள் ஆட்சி அல்ல, தற்குறிகளின் ஆட்சிதான் என தவெக எம்எல்ஏ நிரூபித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை தலைவருமான ரவிசங்கர் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தன்னை சந்திக்க வந்த நபரை பேரவை துணைத் தலைவர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.

விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை ரவி சங்கர் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும்போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.

மக்களோடு மக்களாக நிற்பவர்களைத்தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் ஜோசப் விஜய், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இதுதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?

எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TTV Dhinakaran condemns TVK MLA Ravishankar for launching a brutal attack on an man

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.