மதுரை நகைக்கடையில் திருட்டு! பூட்டு உடைக்காமல், துளையிடாமல்... எப்படி நடந்தது?
மதுரை நகைக்கடையில் பூட்டு உடைக்காமல், துளையிடாமல் நகைகள் திருடப்பட்டது எப்படி என்பது பற்றி..

நகைக் கடை - பிரதி படம் - dps
மதுரை காளவாசலில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக் கடை ஒன்றில் முகமூடி அணிந்த செகாள்ளையர்கள், புகுந்து 500 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகவும் பரபரப்பான சாலையில் அமைந்துள்ளது, அதுவும் நகைக்கடை திறந்து வெறும் 15 நாள்களே ஆன நிலையில், நக் கடையில் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதும், கடையின் பூட்டை உடைக்காமல், சுவரில் துளையிடாமல், திருடர்கள் நகைக் கடைக்குள் எவ்வாறு புகுந்தனர் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
முகமூடி அணிந்திருந்த திருடர்கள், மாடி வழியாக கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை வழக்கம் கோல கடைக்கு வந்து கதவுகளைத் திறந்தபோதுதான், ஊழியர்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடைக்குள் திருடர்கள் எவ்வாறு நுழைந்திருப்பார்கள் என்பதே இப்போதைய முதல் விசாரணையாக உள்ளது. மாடியில் இருந்து லிஃப்ட் வழியாக அல்லது வேறு ஏதேனும் மின் விசிறிக்கான துளை வழியாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடைக்குள் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
சம்பவம் பற்றி காவல்துறை சொல்வது என்ன?
மதுரையில் உள்ள நகைக்கடையில் ரூ.35 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய காவல்துறையினர், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நகைக்கடையில் சுமார் 500 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து நகைகளைத் திருடிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருடுப் போன நகைகளின் மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த நகைக்கடை திறக்கப்பட்டு சுமார் 10 நாள்களே ஆகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் திறப்பு விழாவும் நடத்தப்படவில்லை. மேலும், கடையின் உள்புறப் பணிகளும் முழுமையாக நிறைவடையாத நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவில் சுமார் 30 சதவிகிதம் திருடு போயுள்ளதாக தெரிவித்தார். திருட்டுச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Theft at a jewelry store in Madurai! No broken locks, no drilled holes... how did it happen?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

