மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: வெளிநாட்டு பக்தர்கள் 6 பேரும் பலி! அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவு

மீண்டும் பரபரப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது மின்தடை...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது மின்தடை.

Updated On :

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார்.

தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். வருகைதந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது திடீரென மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த மின்தடை மீண்டும் மின் விநியோகம் தொடர, சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்தடை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கோயிலுக்குள் சென்ற 10 நிமிடத்தில் மின் தடை ஏற்பட்டது. சாமி சன்னதியிலிருந்து வெளியேறும் வரை சுமார் 10 நிமிடத்துக்கு மேல் மின் தடை நீடித்ததால் தரிசனம் செய்ய முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட கட்சியினர் சிரமப்பட்டனர். மேலும், பக்தர்களும் சிரமம் அடைந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று எடப்பாடி பழனிசாமி வருகையின்போது மின்தடை ஏற்பட்டு விவாதமான நிலையில், இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்த போது மின்தடை ஏற்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Summary

A stir was caused when a power outage occurred while Vice President C.P. Radhakrishnan was giving an interview at the Madurai Meenakshi Amman Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER