அரசுப் பணி நியமனம்: வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு... அரசுப் பணி நியமன வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு.

CMO Tamil Nadu Vijay

முதல்வர் விஜய் - DIPR

Updated On :

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC. BC(M), MBC & DNC, SC, ST) ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.

உயர்த்தப்படும் வயது உச்சவரம்பு - குரூப் 1 தேர்வுக்கு...

பொதுப்பிரிவினருக்கு 32ல் இருந்து 37 வயதாக உயர்த்தப்படுகிறது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது.

இதுவே மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47ல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுக்கு...

பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாகவும் ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல குரூப் 4 தேர்வுக்கும் 3 பிரிவுகளில் தனித்தனியாக வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு - உயர் கல்வி தகுதி உடையோருக்கு...

பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

குரூப் 4 தேர்வு - அடிப்படை கல்வி தகுதி உடையோருக்கு... (BC, BCM, MBC, DNC)

பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32ல் இருந்து 37 ஆகவும்

மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

அடிப்படை கல்வி தகுதி உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு...

பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35ல் இருந்து 40 ஆகவும்

மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

Story image
Story image

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும்

இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Govt job appointment: Upper Age Limit Raised by 5 Years: CM Vijay Issues Order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.