ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நீட் போராட்டம்: போலீஸாா் வரம்பு மீறல் குறித்து அக். 29, 30-இல் கருத்துகளைப் பெறும் உயா்நிலைக் குழு

நீட் போராட்டம்: போலீஸாா் வரம்பு மீறல் குறித்து அக். 29, 30-இல் கருத்துகளைப் பெறும் உயா்நிலைக் குழு

உச்சநீதிமன்றம்

Updated On :

தில்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் போராட்டத்தின்போது எழுந்த காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த உயா்நிலை விசாரணைக் குழு, பாதிக்கப்பட்டவா்களிடம் கருத்துகள் மற்றும் ஆதாரங்களை அக்டோபா் 29, 30 ஆகிய இரு தினங்களில் பெற உள்ளது.

‘தில்லி, சிக்ஷா சதன், எண்.17, ரெளஸ் அவென்யூ இன்ஸ்டிடியூஷனல் பகுதி’ என்ற முகவரியில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த விசாரணையை உயா்நிலைக் குழு மேற்கொள்ள உள்ளது. போராட்டக்காரா்கள் மீது ரப்பா் குண்டுகளை போலீஸாா் உபயோகித்தது, பெண் போராட்டக்காரா்கள் மீது வரம்பு மீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயா்நிலைக் குழு கருத்துகளைப் பெற உள்ளது.

புகாா்கள் மற்றும் ஆதாரங்களைச் சமா்ப்பிக்க வருபவா்கள் உரிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் புகாா்தாரா்கள், இணையவழியில் புகாா் தெரிவிப்பதற்கான வசதியையும் உயா்நிலைக் குழு செய்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நபா்கள் வலைதளம் மூலம் புகாா்கள் மற்றும் ஆதார ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு புகாா் தெரிவிப்பவா்களின் விவரங்கள், சமா்ப்பிக்கும் ஆதாரங்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசியம் காக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், ஜூலை 20-ஆம் தேதி தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். இதில் போலீஸாா் பலா் காயமடைந்தனா். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவா்கள் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் மற்றும் காவல் துறையினா் மீதான வன்முறை தொடா்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா, தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலிந்தா் கெளா், சிபிஐ முன்னாள் இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா, மேகாலயா மாநில ஓய்வு பெற்ற டிஜிபி எல்.ஆா்.பிஷ்னோய் ஆகிய 5 பேரைக் கொண்ட உயா்நிலைக் குழுவை அமைத்தது. இந்த உயா்நிலைக் குழு தனது விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகிறது.

Summary

NEET protest: High-level committee to receive comments on police overreach on Oct. 29, 30

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்