அரசுப் பணி நியமனங்களில் முறைகேடுகளுக்கு இடமில்லை: மேற்கு வங்க முதல்வர் திட்டவட்டம்!
அரசு பணி நியமனங்கள் தொடர்பாக..

மேற்கு வங்க முதல்வர் - file photo
அரசு பணி நியமனங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் எழும் வகையிலான எந்தவொரு முறைகேட்டையும் தனது நிர்வாகம் அனுமதிக்காது என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்தார்.
நட்சத்திர விடுதியைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசு நியமனங்களில் நீதிமன்ற வழக்குகள் தொடர வழிவகுக்கும் எதையும் இந்த அரசு அனுமதிக்காது.
முந்தைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் சட்டச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, பள்ளிகளில் சுமார் 26,000 பணியிடங்களுக்கான நியமனங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நாங்கள் விண்ணப்பதாரர்களுக்குத் திறமையின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவோம். இதில் எந்தவித முறைகேடும் இருக்காது. தனது அரசின் கீழ் ஆள்சேர்ப்பில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது.
தனியார்த் துறை வேலைவாய்ப்புகளுடன் அரசுப் பணிகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். தனது அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் மாநிலத் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மாநிலத்தை மேம்படுத்த மேற்கு வங்கத்தின் முதல் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார்
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்கள் ஏதுமில்லை என்று கூறிய முதல்வர் நாட்டின் வளர்ச்சியில் மேற்கு வங்கம் முக்கிய பங்காற்றுவதை உறுதி செய்வதே தங்கள் அரசின் ஒரே இலக்கு.
வர்த்தகம், தொழில் மற்றும் முதலீடுகள் மூலமே மேற்கு வங்கத்தின் வளம் பெருகும் என்று கூறிய அவர், மக்களின் கைகளில் வேலையும் பணமும் இருந்தால் மட்டுமே அவர்களால் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளைக் கொண்டாட முடியும்.
ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ரூ. 6,000 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டம் அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


