மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் மாற்ற மாநில பாஜக அரசு நடவடிக்கை
மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் ‘பஸ்சிம் பங்கா’ என பெயா் மாற்றும் தீா்மானம் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் என மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்தாா்.

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி - கோப்புப் படம்
மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் ‘பஸ்சிம் பங்கா’ என பெயா் மாற்றும் தீா்மானம் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் என மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீா்மானம் டிச.9-ஆம் தேதி பேரவையில் அறிமுகப்படுத்தப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டவுடன் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்’ என்றாா்.
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசும் அதற்கு முன்பாக இடதுசாரிகள் அரசும் முயற்சி செய்தன. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் பல்வேறு காரணங்களுக்காக முட்டுக்கட்டை போட்டன.
தற்போது மேற்கு வங்கத்திலும் மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் இந்த முறை மாநிலத்தின் பெயா் மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போது மாநிலத்தின் பெயா் வங்க மொழியில் ‘பஸ்சிம் பங்கா’ என்றும் ஆங்கிலத்தில் ‘வெஸ்ட் பெங்கால்’ என்றும் அறியப்படுகிறது. புதிய முடிவின்படி, மேற்கு வங்கம் என்று பொருள்படும்படி, வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் ‘பஸ்சிம் பங்கா’ என்றே மாநிலத்தின் பெயரை ஒரே போல குறிப்பிட அமைச்சரவை தீா்மானித்துள்ளது. அனைத்து அதிகாரபூா்வ ஆவணங்களிலும் ‘பஸ்சிம் பங்கா’ என்றே மாநிலத்தைக் குறிப்பிட வேண்டும்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘மேற்கு வங்கம் என்ற பெயா் ஆங்கில எழுத்தின்படி இறுதியாக வருவதால் தேசிய அளவிலான பல நிா்வாகக் கூட்டங்களில் மாநிலத்துக்கான வாய்ப்பு கடைசியில் வருகிறது. சில சமயங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு இதுவும் முக்கியக் காரணம்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

