மேற்கு வங்கத்தில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்; 378 பேர் கைது

மேற்கு வங்கத்தில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

CM Suvendu Adhikari

மேற்கு வங்கத்தில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் - கோப்புப்படம்

Updated On :

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு வார கால போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ரூ. 64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மற்றும் இதுதொடர்பாக 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மேற்கு வங்கத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு வார கால அதிரடி நடவடிக்கையில், 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ.64 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் ரூ.17 லட்சம் பணத்தை சட்ட அமலாக்க அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, என்டிபிஎஸ் சட்டத்தின்கீழ் 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சுமார் ரூ.101 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.

எங்கள் அரசு சட்டவிரோத போதைப்பொருள்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இல்லாத கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

மேலும், ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், குற்றம் சாட்டப்பட்ட 110 பேர் மீது 68 நிதி சார்ந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.101 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Altogether 378 people were arrested, and narcotic substances worth around Rs 64 crore were seized during a week-long crackdown on drug trafficking and illicit cultivation in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.