விசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

குவஹாத்தியில் ரூ.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் 2 பேர் கைது

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்து...

NCB Seizes Drugs Worth Rs.43 Crore in Guwahati

குவஹாத்தியில் ரூ.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் கடத்தி வந்த லாரி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் - எக்ஸ்

Published On :

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ.43 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் மாத்திரைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள்கள் கடத்தில் ஈடுபட்டு 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படை தரப்பில் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்திக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மாநில காவல் படைகள், போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படைகள், அஸ்ஸாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, சுங்கத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது 2 லாரியில் ரூ. 43 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மியான்மரில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் சர்வதேச விநியோகஸ்தர்கள், உள்நாட்டு விற்பனையாளர்கள் மற்றும் இது தொடர்பானவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தலின் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் எல்லைத் தாண்டிய தன்மையை எடுத்துரைத்த என்சிபி, மாநில காவல் படைகள், போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படைகள், அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, சஷஸ்திர சீமா பல், சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற முகமைகளுடன் உளவுத் தகவல்களைப் பகிர்வதையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, போதையற்ற இளைய சமுதாயம் மிகவும் அவசியமானது என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தின் அடிப்படையில், 2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை என்சிபி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

The Narcotics Control Bureau (NCB), Guwahati Zonal Unit, has seized more than 53 kilograms of methamphetamine and WY tablets, with an estimated illicit market value of around 43 crore rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.