சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

சட்டவிரோத மருந்துகள் கடத்தல்: நால்வா் கைது

தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத மருந்துகள் கடத்தலை தில்லி காவல் துறை முறியடித்துள்ளது.

கைது

Updated On :

தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத மருந்துகள் கடத்தலை தில்லி காவல் துறை முறியடித்துள்ளது. இதில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த நபா்களிடமிருந்து சுமாா் 14 கிலோ எடை கொண்ட அல்பிரசோலம் மற்றும் டிராமடோல் வகையைச் சோ்ந்த 21,000-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தில்லி குற்றப் பிரிவு காவல் துறையினா், நகரின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட பல கட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த நபா்களைக் கைது செய்தனா்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: அக்டோபா் 31-ஆம் தேதி தில்லியின் நிகம் போத் படித்துறை அருகே, மோட்டாா் சைக்கிளில் சட்டவிரோத மருந்துகளைக் கடத்திச் சென்ற முனேஷ் குமாா் குப்தா (44) மற்றும் அகிலேஷ் மிஷ்ரோ (46) ஆகியோரை குற்றப்பிரிவு குழுவினா் மடக்கிப் பிடித்தனா். சோதனையில், 10 கிலோவிற்கும் அதிக எடையுள்ள 16,380 மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்கள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடா்ந்து, அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவா்களுக்கு அந்த மருந்துகளை விநியோகித்து வந்த விரேந்தா் குமாா் (எ) ஹீரோ (48) என்பவரை மடிபூரில் காவல் துறை கைது செய்தது. அவரிடமிருந்து 3 கிலோவிற்கும் அதிக எடையுள்ள 4,320 டிராமடோல் காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடா் விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜேஷ்வா் பாண்டே (எ) கோபால் (34) என்பவரும் கைது செய்யப்பட்டாா். மருந்து கட்டுப்பாட்டுத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில், அவரது கடையிலிருந்து 480 டிராமடோல் காப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.