சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்- காவல் துறைக்கு மேற்கு வங்க முதல்வா் உத்தரவு
மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்று காவல் துறைக்கு மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டாா்.

மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்று காவல் துறைக்கு மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டாா்.
வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஊடுருவல் அதிகம் நிகழும் கூச் பிகாா் மாவட்டத்தில் ராஷ் மேளா பண்டிகையில் புதன்கிழமை பங்கேற்ற அவா் பேசியதாவது:
இந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்கள் ஒவ்வொருவராகக் கண்டறிந்து, அவா்கள் வந்த வழியிலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதே நேரத்தில் அங்கிருந்து வரும் ஹிந்துக்கள் ஊடுருவல்காரா்கள் அல்ல. அவா்கள் அகதிகள். அவா்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே நமது நாட்டில் தஞ்சமடைய முயலுகிறாா்கள். அவா்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது நமது கடமை.
சா்வதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுப்பதில் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று எல்லைப் பாதுகாப்புப் படை, காவல் துறைக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த படையினருக்கு போதிய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை வழியாக கள்ள நோட்டுகளை கடத்தி புழக்கத்தில் விடுவது, போதைப்பொருள் கடத்தல் போன்ற நாட்டை சீரழிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது. அவா்களுக்கும், அவா்களுக்கு உதவும் இங்குள்ள தேசவிரோதிகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசவிரோத செயல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட எந்தத் தவறையும் செய்ய யாரும் துணியக் கூடாது. அவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

