அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!
மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்...

மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத் - அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஏபி
அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லீம் செனட்டராக தேர்வாகியுள்ள ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத்தை, நேரில் சந்திக்கவுள்ளதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடுமையாகத் தோல்வியடைந்தது.
இத்துடன், பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் மிச்சிகன் மாகாண செனட்டராகத் தேர்வாகியுள்ளார். புதிய பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வரும் 2027 ஜனவரியில் பதவியேற்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டரான அப்துல் எல்-சயீதை விரைவில் சந்தித்து உரையாடவுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 24) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அப்துலின் முக்கிய வாக்குறுதியான அனைவருக்குமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பில், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், “மெடிகேர் ஃபார் ஆல்” எனும் அந்தத் திட்டத்தின் பெயரை “டிரம்ப் கேர்” எனப் பெயர் மாற்றம் செய்ய அப்துல் முன்வந்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ள தேதி குறித்து டிரம்ப் மற்றும் அப்துல் எல் சயீத் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்துல் எல்-சயீத்தை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
President Trump has said that he will personally meet Abdul El-Sayed of the Democratic Party, who has been elected as the first Muslim senator in American history.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


