சீனப் பயணம்! தனிப்பட்ட முறையில் புதினை சந்திக்கும் டிரம்ப்!
சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு ரஷிய அதிபர் புதினை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாகத் தகவல்...

ரஷிய அதிபர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்
சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை முன்னிட்டு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து சீனாவின் ஷென்சென் நகரத்துக்கு இன்று (நவ. 18) மாலை விமானம் மூலம் சென்றடைந்தார்.
இந்த நிலையில், சீனாவுக்கு வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதினை தனிப்பட்ட முறையில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இடையே நாளை (நவ. 18) நடைபெறவுள்ள முத்தரப்பு சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த 2025 ஆம் ஆண்டு புதின் மற்றும் டிரம்ப் நேரில் சந்தித்து மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இத்துடன், மெக்சிகோ அதிபர் கிளாவ்டியா ஷெயின்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியான நிலையில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
U.S. President Trump, who is currently in China, is set to hold a separate meeting with Russian President Vladimir Putin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


