ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரைசோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா நாட்டுக்குச் சென்றடைந்தது குறித்து...

President Donald Trump landed in China

சீனாவில் அதிபர் ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP

Updated On :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றடைந்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க இன்று (நவ. 18) பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து சீனாவின் ஷென்சென் நகரத்துக்கு விமானம் மூலம் சென்றடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரில் சென்று வரவேற்றார். மேலும், அவருக்கு சீன அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்கும் மெக்சிகோ அதிபர் கிளாவ்டியா ஷெயின்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நாளை முத்தரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்கள் மூவரும் முதல்முறை கூட்டாகச் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா-ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியான நிலையில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US President Donald Trump arrived in China on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.