தைவான் மீண்டும் சீனாவுடன் இணைக்கப்படும்! - ஜின்பிங் பேச்சால் பரபரப்பு!
தைவான் மீண்டும் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளது குறித்து...

சீன அதிபா் ஷி ஜின்பிங். - கோப்புப் படம்
தைவான் மீண்டும் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சுதந்திரம் பெற்ற தனிநாடான தைவான் விரைவில் அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார். இதற்கு தைவான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சிகளை முடிவுக்குக் கொண்டு வந்த சீன புரட்சியாளர் சன் யாட்-சென்னின் 160 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (நவ. 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜின்பிங் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
“வரலாற்று அலையை யாராலும் நிறுத்த முடியாது. தாய்நாட்டை முழுவதுமாக ஒன்றிணைப்பதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். நிச்சயம் அது விரைவில் உணரப்படும்.
அமைதியான முறையில் ஒன்றிணைப்பதையும், ஒரு நாடு இரண்டு அமைப்புகள் எனும் கொள்கையையும் சீன அரசு முன்மொழிகின்றது. மேலும், ஒரே சீன கொள்கையை முன்னெடுத்து தைவான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், தைவானில் உள்ள சீனர்கள் உள்பட அனைவரும் தைவான் சுதந்திரம் பெறுவதற்கு பிரிவிணைவாதப் படைகளுடன் ஒன்றிணைய வேண்டும் எனவும், அமைதியான முறையில் முன்னேற்றங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, சீனாவின் ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் எனும் திட்டத்தை தைவான் மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறிய தைவான் அரசு, அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு அடிபணிவதாக அர்த்தம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தைவானின் கடல்பகுதியில் சீன கடற்படையின் கப்பல்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதால் இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Chinese President Xi Jinping's statement that Taiwan will be reunited with China is said to have further heightened tensions between the two sides.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


