ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் இல்லை: அமெரிக்கா

சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் ஏதுமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published On :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்கவிடமிருந்து ஆயுதங்களை வாங்க விருப்பமா என்று கேட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் ஏதுமில்லை என அமெரிக்கா இன்று தெரிவித்தது.

தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக சீனா ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக சீனாவுக்கு ஆயுதங்கள் விற்கும் முன்மொழிவை டிரம்ப் முன்வைத்ததாக சீனாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டியூ கூறியிருந்தார்.

வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஷி கடந்த வாரம் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது அவருடன் பேசிய டிரம்ப், ”நாங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்பனை செய்கிறோம். நீங்களும் எங்களிடம் ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா?” எனக் கேட்டதாக தனியார் ஊடகத்திடம் பேசுகையில் டேவிட் பெர்டியூ குறிப்பிட்டார்.

மேலும் பேசிய டேவிட் பெர்டியூ, "பிற விற்பனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. டிரம்ப்பும் அதிபர் ஷியும் சந்திக்கும் போதெல்லாம் அதுபற்றிப் பேசுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், “சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டமோ முன்மொழிவோ அமெரிக்க அரசுக்கு இல்லை. அமெரிக்கச் சட்டம் அதனைத் தடை செய்கிறது” என அமெரிக்க வெளியுறவுத்துறை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தி அறிக்கையில் இன்று குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவுத் துறையிடம் கருத்துகளைக் கேட்டபோது அவர்கள் நேரடியாக பதிலளிக்காமல், “சீனா எப்போதும் தனது சொந்தத் தேவைகளின் அடிப்படையில் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தி வருகிறது. அதேநேரம், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதிலும் சீனா உறுதியாக உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்திருப்பது அல்லது ராணுவ வழிமுறைகள் மூலமாக சுதந்திரம் தேடுவது ஒரு முட்டுச்சந்தைப் போன்றது” என்று தெரிவித்தனர்.

Summary

No plan to sell arms to China: US

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER