இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அமெரிக்காவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்: நேரில் வரவேற்றார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்காவில் சீன அதிபருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளித்த டிரம்ப்பை பற்றி...

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Published On :

அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை வாஷிங்டன் சென்ற அவரை அதிபர் டிரம்ப் நேரில் சென்று வரவேற்றார்.

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான்.

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான்.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக சீன அதிபர் ஜி ஷின்பிங், வருகையைத் தொடர்ந்து அவருக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்புக்கு டிரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோர் மேரிலாந்து விமானப்படைத் தளத்திற்கு வந்தடைந்தனர். அங்கு அவர்களை வரவேற்பதற்காக டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பும் காத்திருந்தனர்.

சீன அதிபருக்கு 100 அடி நீள சிவப்புக் கம்பள மரியாதையும், பீரங்கிப் படை, 21 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு அமெரிக்க, சீனக் கொடிகளை ஏந்தியவர்கள் மரியாதை அணிவகுப்பு நடத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பி-1 விமானங்களும் விமானப்படைத் தளத்தின் மீது பறந்தன.

இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், வரிகள், தொழில்நுட்பம், செய்யறிவு, ராணுவம், தைவான், ஈரான் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் ஆகியவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கடந்த 65 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் அதிபர் ஒருவர் விமான நிலையத்துக்கே நேரடியாக வந்து வரவேற்பளிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக கடந்த 1962 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமர் ஹரால்டு மாக்மிலனை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி வரவேற்றிருந்தார்.

Summary

US President Donald Trump welcomed Chinese President Xi Jinping at Joint Base Andrews on Wednesday, rolling out an elaborate military reception as the Chinese leader began a three-day state visit to Washington.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER