ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: டிரம்ப்

ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - AP

Published On :

ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

ஐ.நா. பொதுச்சபையின் தலைமையகத்தில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அவர் பேசுகையில், “கடந்த 51 ஆண்டுகளாக தீவிரப் போக்கு கொண்ட ஈரான் ஆட்சி, ரத்தத்துடனும் அதிகளவு படுகொலைகளுடனும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்தியக் கிழக்கு மற்றும் அதைத் தாண்டிய பகுதிகளிலும் ஈரான் கொலைகள், அழிவு மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. அவர்கள் மத்திய கிழக்கை ஆதிக்கம் செய்யும் சக்தியாக இருந்தனர். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். நான் அரசியலில் நுழைந்த நாள் முதல் இதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஐ.நா. சபைக்கு வந்தடைந்தபோது, உலகளாவிய அமைப்பான இதில் உரையாற்றுவது கௌரவம் எனத் தெரிவித்த டிரம்ப், திடீரென ஊடகங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

தனது ஆட்சி பற்றி செய்தி வெளியிடுவதில் சிஎன்என், எம்எஸ்என்பிசி, பொலிட்டிகோ போன்ற ஊடகங்கள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதி மறுப்பதாக டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழைய அனுமதி பெறவேண்டி அந்த ஊடகங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில், ஐ.நா. சபையில் செய்தியாளர்கள் சூழ்ந்திருக்கையில், சிஎன்என் செய்தியாளரிடம் டிரம்ப் கோபமாகப் பேசினார். “சிஎன்என் இங்கு வந்து என்னைப் பற்றி செய்தி சேகரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இங்கே இருக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டார்.

Summary

US President Donald Trump vowed on Tuesday that Iran would never be allowed to acquire a nuclear weapon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.