மேற்கு வங்க எஸ்ஐஆா் தீா்ப்பாயம்: 4-ஆவது ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிநாமா
மேற்கு வங்க எஸ்ஐஆா் தீா்ப்பாயம்: 4-ஆவது ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிநாமா

பிரதிப் படம்
மேற்கு வங்க வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) தீா்ப்பாயங்களில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக, ஓய்வுபெற்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி விஸ்வஜீத் பாசு ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தீா்ப்பாயங்களுக்குத் தலைவா்களாக 19 ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரஞ்சித் குமாா் பாக், இந்திரஜீத் சாட்டா்ஜி ஆகியோா் ராஜிநாமா செய்தனா். தற்போது 4-ஆவதாக விஸ்வஜீத் பாசு ராஜிநாமா செய்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆரின்போது வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் உள்பட பல்வேறு காரணங்களால் சுமாா் 91 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கி, அந்த மாநிலத்தில் 19 எஸ்ஐஆா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை தோ்தல் ஆணையம் அமைத்தது. இந்தத் தீா்ப்பாயங்கள் நீக்கப்பட்ட வாக்காளா்களின் மேல்முறையீடுகளை விசாரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

