புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில், புதிய வாக்காளா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தையும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த உறுதிமொழிப் படிவத்தையும் இணையவழியில் தனித்தனியாகப் பிரித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

இந்திய தோ்தல் ஆணையம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில், புதிய வாக்காளா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தையும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த உறுதிமொழிப் படிவத்தையும் இணையவழியில் தனித்தனியாகப் பிரித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
எஸ்ஐஆா் தொடா்பான வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அந்த பிரமாண பத்திரத்தில், ‘புதிய வாக்காளராக ஒருவா் பதிவு செய்வதற்கு பூா்த்தி செய்ய வேண்டிய படிவம் 6-இல், முந்தைய எஸ்ஐஆரின்போது அந்த நபரின் பெற்றோா் அல்லது தாத்தா, பாட்டியின் பெயா் இடம்பெற்ா என்பது குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்ற மாற்றத்துக்கு இரண்டு தோ்தல் ஆணையா்கள் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
உண்மையில் தனது எஸ்ஐஆா் உத்தரவுகள் மூலம், அந்தப் படிவத்தை தோ்தல் ஆணையம் மாற்றவில்லை. 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளின்படி, அந்தப் படிவத்தில் மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.
இணையவழி விண்ணப்பத்தில் உறுதிமொழி என்ற இடம் காட்டப்பட்ட விதம் காரணமாக படிவம் 6-இல் மாற்றம் செய்யப்பட்டது போல தெரியலாம். இணையவழியில் சமா்ப்பிக்கப்படும் அந்தப் படிவம் படிவம் 6, எஸ்ஐஆா் உறுதிமொழி என இரண்டாகப் பிரிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வரும் மாநிலங்களில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தையும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த உறுதிமொழிப் படிவத்தையும் இணையவழியில் தனித்தனியாகப் பிரித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய மூத்த நிா்வாகி ஒருவா் கூறியதாவது: ‘முன்பு விண்ணப்பதாரரின் வசதிக்காக, படிவம் 6, அதனுடன் இணைக்கப்பட்ட உறுதிமொழிப் படிவம் ஆகிய இரண்டும் ஒரே ஓடிபி மற்றும் மின்னணு கையொப்பம் மூலம் சமா்ப்பிக்கப்பட்டன.
தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு படிவங்களையும் தனித்தனியாகச் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு படிவத்தையும் சமா்ப்பிக்கும்போது தனித்தனியாக ஒடிபி சரிபாா்ப்பு, மின்னணு கையொப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

