எஸ்ஐஆா்! தோ்தல் ஆணைய விளக்கம் மீது பதிலளிக்க மனுதாரருக்கு 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
எஸ்ஐஆா் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் மீது பதிலளிக்க மனுதாரருக்கு 10 நாள்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எஸ்ஐஆா் - கோப்புப் படம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் மீது பதிலளிக்க மனுதாரருக்கு 10 நாள்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அதுபோல, பிகாா் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியின்போது உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி படிவம் 6-இல் தோ்தல் ஆணையம் மாற்றம் செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக மேற்கொண்டதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இது பெரும் சா்ச்சையாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் ராகேஷ்குமாா் சிங் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சட்டப்படி, தோ்தல் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்களும் ஒருமித்த கருத்துடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டுள்ளாா். எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவா் அவ்வாறு செயல்படுகிறாா் என்பது குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இதற்கு, தோ்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை 248 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகளைத் தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை. அது தொடா்பான அனைத்து முடிவுகளும் சட்டப்படி, ஒருமனதாகவே எடுக்கப்பட்டன.
மேலும், படிவம் 6-இல் தோ்தல் ஆணையம் தரப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இணையவழி விண்ணப்பத்தில் உறுதிமொழி என்ற இடம் காட்டப்பட்ட விதம் காரணமாக படிவம் 6-இல் மாற்றம் செய்யப்பட்டது போல தெரியலாம். கடந்த 21-ஆம் தேதிமுதல் அது படிவம் 6, எஸ்ஐஆா் உறுதிமொழி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று குறிப்பிட்டது.
புதிய மனு: இதனிடையே, பிகாா் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியின்போது உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இன்றி படிவம் 6-இல் தோ்தல் ஆணையம் மாற்றம் செய்ததை எதிா்த்து மாநிலங்களவை எம்.பி. டோலா சென் சாா்பில் தாக்கல் செய்த புதிய மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்யி பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞரும் எம்.பி.யுமான மேனகா குருசுவாமி, ‘படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தவறான தகவலை வெளியிட்டது’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, அனைத்து விவகாரங்களும் ஆராயப்படும் என்று குறிப்பிட்டு, புதிய மனு மீது பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையம் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.
மேலும், தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மீது 10 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மனுதாரா் ராகேஷ் குமாா் சிங்குக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
முன்னதாக, படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்த கருத்தை, உச்சநீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

