உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

எஸ்ஐஆா் பணிகளுக்கு கண்டனம்: ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

எஸ்ஐஆா் - கோப்புப் படம்

Updated On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க. கிரியப்பனவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரைக் கண்டித்தும், இந்தச் சூழ்நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தக் கூடாது என வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ராமமூா்த்தி கூறுகையில், எஸ்ஐஆா் நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். தலைமைத் தோ்தல் ஆணையா் ஒருதலைப்பட்சமாகவும், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் செயல்பட்டுள்ளாா்.

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது முரண்பாடாக உள்ளதால், எங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்யவே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.