மே. வங்க எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி நியமனம் ரத்து! உயர் நீதிமன்றம் அதிரடி!
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி நியமிக்கப்பட்ட உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது...

ரிதப்ரதா பானர்ஜி - ANI
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியின் ரிதப்ரதா பானர்ஜி நியமிக்கப்பட்டதை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளில் முதல்முறையாகத் தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மமதாவின் தலைமைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதிருப்தி அணியை உருவாக்கியுள்ளனர்.
பின்னர், அதிருப்தி அணி உறுப்பினர்களின் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராகவும், அக்ருஸ்ஸமான் தலைமைக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாய் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை இன்று (நவ. 27) விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா ராவ், ரிதப்ரதா பானர்ஜி மற்றும் அக்ருஸ்ஸமான் ஆகியோரின் பதவி நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா ஆகியோரின் நியமனங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க அவைத் தலைவர் ரதீந்திர போஸுக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றம், 10 நாள்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 80 சட்டப்பேரவை உறுப்பினர்களில், 58 பேர் அதிருப்தி அணிக்கு ஆதரவளித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Calcutta High Court has set aside the order appointing Ritabrata Banerjee, from a dissident faction of the Trinamool Congress, as the LOP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


