காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு அக். 16 வரை நீதிமன்றக் காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு அக். 16 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்து...


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அக். 16 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 ராமேசுவரம் மீனவா்கள். - டிஎன்எஸ்

Published On :

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவா்கள் 9 பேரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரோகா் என்பவரது விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த எபிஸ்டன் (29), மத்தியா (22), ஜான்ஜெய்சன் (25), ஸ்டிவன்சன்(23), சுபாா்டன் (25), அபிஸ்ன் (27), மோபிஸ் (21), அந்தோணி பிரதீப் (26), அந்தோணி புருடஸ் (42) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

இதையடுத்து, 9 மீனவா்கள் மீதும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 9 மீனவா்களையும் வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

Sri Lankan court orders judicial custody for 9 Rameswaram fishermen until Oct. 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.