தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

கரையைக் கடந்த 'ஒர்னாப்' புயல்: சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே 'ஒர்னாப்' புயல், கரையைக் கடந்துள்ள நிலையில், ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய அவசர ஆலோசனை குறித்து...

Cyclone 'Arnab' to make landfall in Andhra Pradesh

முதல்வா் சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Updated On :

வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்துள்ள நிலையில், ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உஷாா்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடக்கும்போது, அதிகபட்சம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். திடீரென இந்த வேகம் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரம், மேற்கு வங்கம், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

காக்கிநாடாவில் பலத்த காற்று கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 விமானங்கள் சேவை ரத்து

இந்த நிலையில், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 12 இண்டிகோ விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தது

புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரம், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் மற்றும் அந்தர்வேதிக்கு (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே அதி தீவிர புயலாக கரையைக் கடக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ஒர்னாப் அதி தீவிரப் புயலாக முழுமையாக கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒர்னாப் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவித்திரி நகர் என்ற கடலோர கிராமத்தில், கடல்நீர் புகுந்து, கிராமத்தை சுமார் மூன்று அடி தண்ணீரில் மூழ்கடித்தது. கிராமமக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மற்றும் நிர்வாகி சிவராஜ் மீனா ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். இந்தப் புயலால் சுமார் 20 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது, இதனால் ஏனாம் பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் போனது. பல மின் கம்பங்களும் மரங்களும் வேரோடு சாய்ந்ததால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இந்த பகுதி முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்த நிலையில், ஒர்னாப் புயலின் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை மேற்காண்டாா்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, குடிநீா், இதர அத்தியாவசிய வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.வானிலை சீரடைந்ததும் மின் இணைப்பை மீட்டெடுக்கவும், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ​​பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்று கேட்டார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று தொடர்ந்தாலும், சில மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has placed officials on high alert following Cyclone Arnab

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.