தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

லியோ உங்களது வரலாறு எப்போதும் நிலைத்திருக்கும்..! மெஸ்ஸிக்கு ரொனால்டோ வாழ்த்து!

ஆர்ஜென்டீன கேப்டன் மெஸ்ஸிக்கு போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ வாழ்த்து தெரிவித்தது குறித்து...

Portugal's Cristiano Ronaldo arrives for training in Copenhagen, Denmark, Wednesday, Sept. 30, 2026, ahead of their Nations League soccer match against Denmark. (Liselotte Sabroe/Ritzau Scanpix via AP)

மெஸ்ஸி, ரொனால்டோ - படங்கள்: ஏபி

Published On :

ஆர்ஜென்டீன கேப்டன் 39 வயதாகும் லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து ஓய்வுக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் லியோனல் மெஸ்ஸி தனது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசி ஆட்டத்தில் 2 அசிஸ்ட், ஒரு கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மிகுந்த கொண்டாட்டத்துடன் மெஸ்ஸிக்கு பிரியாவிடை செலுத்தப்பட்டது. சக வீரர்கள், ரசிகர்கள் கண்ணீருடன் மெஸ்ஸியை அனுப்பி வைத்தார்கள்.

இது குறித்து மெஸ்ஸி அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மெஸ்ஸிக்கு நிகராக கால்பந்து உலகில் கொண்டாடப்படும் ரொனால்டோ அந்தப் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.

அந்தப் பதிவில், “லியோ, பல ஆண்டுகளாக உங்கள் நாட்டை காப்பற்றியுள்ளீர்கள்; அந்த வரலாறு எப்போதும் நிலைத்திருக்கும். நீங்கள் ஆர்ஜென்டீனாவிற்காக சாதித்தவற்றுக்கு எப்போதும் என்னிடம் அதற்கான மரியாதை இருக்கும். ஓர் அணைப்பு” எனக் கூறியுள்ளார்.

இந்த கமெண்டிற்கு மட்டுமே சுமார் 3 மில்லியன் (30 லட்சம்) லைக் கிடைத்துள்ளது. 41 வயதாகும் ரொனால்டோ இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளருடன் அவருக்கு சிறு பிளைவு ஏற்பட்டு அவர் சமீபத்தில் அணியை விட்டு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி பதிவில் ரொனால்டோ கமெண்ட்

மெஸ்ஸி பதிவில் ரொனால்டோ கமெண்ட் - படம்: இன்ஸ்டா / லியோ மெஸ்ஸி

Summary

History that lasts forever: Ronaldo's touching Insta tribute to Messi after farewell

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.