உலகின் சிறந்த 11 கால்பந்து வீரர்கள்... சொந்த சாதனையை முறியடித்த மெஸ்ஸி!
உலகின் சிறந்த 11 கால்பந்து வீரர்கள் பட்டியலில் 18ஆவது முறையாக இடம்பெற்ற லியோனல் மெஸ்ஸி குறித்து...

லியோனல் மெஸ்ஸி - AFP
உலகின் சிறந்த 11 கால்பந்து வீரர்கள் பட்டியலில் 18ஆவது முறையாக இடம்பெற்ற லியோனல் மெஸ்ஸி (39 வயது) தனது சாதனையை மேலும் நீட்டித்துள்ளார்.
75 நாடுகளில் இருந்து 26,000 கால்பந்து வீரர்கள் சேர்ந்து உலகின் சிறந்த 11 கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள். இதனை ஃபிஃப்ரோ 2005 முதல் வழங்கி வருகிறது. ஃபிஃபா உடன் இணைந்து ‘ஃபிஃபா ஃபிஃப்ரோ’ என 2024 வரைக்கும் இதனை வழங்கி வந்தது.
பின்னர், மீண்டும் தனியாக இந்தப் பட்டியலை பிஃப்ரோ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக மெஸ்ஸி 18 முறை இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இரண்டாம் இடத்தில் சிஆர்7 (ரொனால்டோ) 15 முறை இடம்பிடித்து அசத்தியுள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான இந்த பிளேயிங் லெவனில் ஸ்பெயின் வீரர்கள் ஆதிகக்கம் செய்துள்ளார்கள்.
ஃபார்வேர்டு வீரர்கள் - 4, மிட்ஃபீல்டர்கள் - 3, டிஃபெண்டர்கள் -3, கோல் கீப்பர் ஒருவர் என மொத்தம் 11 வீரர்களை இந்தப் பட்டியலில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள்.
2026ஆம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்கள் பட்டியல்
ஃபார்வேர்டு (முன்கள வீரர்கள்) - லியோனல் மெஸ்ஸி, கிளியன் எம்பாபே, லமின் யமால், எர்லிங் ஹாலண்ட்.
மிட்ஃபீல்டர்கள் - விடின்யா, ரோட்ரி, ஜூட் பெல்லிங்கம்
டிஃபெண்டர்கள் - நுனோ மெண்டிஸ், பௌ குபார்சி, அச்ரப் ஹகிமி
கோல்கீப்பர் - டேவிட் ராயா
பேலந்தோர் விருது வென்ற ஹாரி கேன் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. லமின் யமால், பௌ குபார்சி 19 வயதில் இடம் பிடிக்க, 39 வயதில் மெஸ்ஸி இடம்பிடித்துள்ளார்.
Summary
Harry Kane Snubbed as Messi Makes Record 18th FIFPRO World 11
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

