திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்..! ஆர்ஜென்டீனாவின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு!

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கௌர டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

ATLANTA, GEORGIA - JULY 07: Lionel Messi #10 of Argentina prepares for taking a penalty kick during the FIFA World Cup 2026 Round of 16 match between Argentina and Egypt at Atlanta Stadium on July 07, 2026 in Atlanta, Georgia. Buda Mendes/Getty Images/AFP (Photo by Buda Mendes / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)

லியோனல் மெஸ்ஸி (கோப்புப் படம்) - AFP

Published On :

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு பியூனோஸ் ஏர்ஸ் பல்கலைக்கழகம் கௌர டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

39 வயதாகும் மெஸ்ஸி சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது, கடைசியாக ஓர் ஆட்டமாக அக்.6ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சியை முன்னிட்டு விளையாடவிருக்கிறார்.

ஆர்ஜென்டீன அணிக்காக 207 முறை விளையாடியுள்ள மெஸ்ஸி 125 கோல்கள், 60 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். அவரது தலைமையில் ஆர்ஜென்டீன அணிக்கு 2022 உலகக் கோப்பை, 2021, 2024 கோபா அமெரிக்கா, 2022 ஃபைனலிஸ்மா ஆகிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மெஸ்ஸி ஆர்ஜென்டீன அணிக்காக 2008ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். யு-20 உலகக் கோப்பையும் வென்று கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருப்பதாக ஆர்ஜென்டீனாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் யுபிஏ அறிவித்துள்ளது. இது குறித்து யுபிஏ தனது வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

யுபிஏ பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உயரிய விருதான டாக்டர் பட்டத்தை அளித்து கௌரவிக்கிறோம். சமீபத்திய பத்தாண்டுகளில் உலகின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்ஸி முக்கியமாக கோப்பைகளை நாட்டிற்கு வென்று கொடுத்துள்ளார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை, மெஸ்ஸியின் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த பட்டம் வழங்கப்படும். மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கை உயர்வு, விடாமுயற்சி, மனிதாபிமானம், அறநெறி சார்ந்த செயல்பாடுகள், ஆர்ஜென்டீனாவினைப் பிரதிநிதிப்படுத்தி விளையாடிய அவரது அர்ப்பணிப்பு, மதிப்புகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ரீதியாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

மெஸ்ஸி கேப்டனாக 2021ல் கோபா அமெரிக்காவை வென்றார். சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ஜென்டினாவிற்கு கிடைத்த முதல் பெரிய கோப்பை இது. அடுத்து 2022ல் ஃபைனலிஸ்மா, 2022 உலகக் கோப்பை, 2024ல் கோபா அமெரிக்கா, 2026 உலகக் கோப்பை ரன்னர் அப் என அவரது தலைமையில் அசத்தியுள்ளார். முதல்முறையாக 4 கோப்பைகள் அவரது தலைமையில்தான் வெல்லப்பட்டுள்ளன.

மெஸ்ஸியின் எண்ணிக்கையைக் காட்டியிலும் அவர் விளையாட்டு வீரராக அவரது பண்பு, விடாமுயற்சி, மனிதாபிமானம் எங்கள் நாட்டின் கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறது. அவரது முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு காட்ட இந்த விருது உதவும். சிறந்தவற்றின் சான்றாக இருக்கும் மெஸ்ஸிக்கு இந்தப் பட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம்.

ஆர்ஜென்டீனாவின் மதிப்புகளை உலக அளவில் காலபந்தின் மூலம் உயர்த்தியவர் மெஸ்ஸி. இந்த கௌரவ டாக்டர் பட்டம் அவரது கால்பந்தின் வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரமாகும். ஆர்ஜென்டீன மக்களின் சார்பாக இந்தப் பட்டத்தை பெருமையுடன் வழங்குகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

The University of Buenos Aires awarded Lionel Messi an honorary doctorate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.