அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
அன்பில் மகேஸ் - கோப்புப் படம்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000 -க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டடனர்.
முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி. அரசகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முத்துகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த வழக்கில் அன்பில் மகேஸ் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவ. 18 வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அன்பில் மகேஸின் ஜாமீன் மனு இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அன்பில் மகேஸ் தரப்பு கூறியும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அன்பில் மகேஸ், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Summary
Anbil Mahesh bail plea rejected by Chennai special court for anti-corruption cases
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


